Close
பிப்ரவரி 23, 2025 10:54 காலை

அண்ணாமலை மிகப் பெரிய தலைவலி..! விஜய்யை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்..!

தமிழ் நாடு பாஜ தலைவர் அண்ணாமலை -கோப்பு படம்

தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்து வருகிறார் என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் எச்சரித்துள்ளார்.

தவெகா தலைவர் விஜய்யை நேரில் சந்திக்க பிப்ரவரி 10ம் தேதி சென்னை வந்தார் பிரசாந்த் கிஷோர். சென்னையில் உள்ள விஜய் வீட்டில் சந்தித்து, வரும் 2026 சட்டசபை தேர்தல் குறித்தும் , தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார். இதில் பல முக்கிய விசயங்களை விஜய்க்கு தெரிவித்தார் பிரசாந்த் கிஷோர்.

அடுத்து தமிழக வெற்றி கழகத்தில் சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுன் உடன் ஆலோசனை நடத்திய பிரசாந்த் கிஷோர், அடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் விஜய்யின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் விஜய் வீட்டில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த விஜய் – பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் அதில் 1 மணி நேரம் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் அதிகளவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் புதியதாக கட்சி தொடங்கிய பின்பு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான எதிர்பார்ப்பு உள்ளது, மேலும் 2026 சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடமே இருக்கும் நிலையில், இந்த ஒரு வருடத்தில் என்னென்ல்லாம் செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையை பிரசாந்த் கிசோர் தெரிவித்து இருக்கிறார்.

அதில் திமுகவுக்கு மாற்றாக தமிழக வெற்றி கழகத்தை மக்கள் இதுவரை ஏற்று கொள்ளவில்லை என்கிற என்கிற அதிர்ச்சியூட்டும் தகவலை விஜய்யிடம் தெரிவித்த பிரசாந்த் கிஷோர், அதிமுக அட்ரஸ் இல்லாமல் கரைந்து கொண்டிருக்கும் காரணத்தையும் விஜய்யிடம் விளக்கியுள்ளார். அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுகவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வந்தது.

திமுகவுக்கு மாற்று அண்ணாமலை தான், குறிப்பாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய கூடிய தகுதியான தலைவர் அண்ணாமலை தான் என மக்களின் மன நிலையினை மாற்றி விட்டார்.

இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகள் அண்ணாமலையை நோக்கி திருப்பியுள்ளது. தமிழக அரசியல் களத்தை திமுக மற்றும் பாஜக என்கிற ஒரு சூழலை உருவாக்கி விட்டார் அண்ணாமலை. ஆனால் தமிழக வெற்றி கழகம் பெரியாரை தூக்கி பிடிக்க தொடங்கியதுமே, திமுக எதிர்ப்பு ஓட்டு தமிழக வெற்றி கழகம் பக்கம் வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் சென்று விட்டது.

காரணம் திமுக எதிர்ப்பு நிலையில் இருப்பவர்கள், பெரியார் கொள்கையையும் எதிர்க்க கூடியவராக இருப்பார்கள், அதனால் தான் ஜெயலலிதா பெரியார் கொள்கையை தூக்கி பிடிக்காமல் அரசியல் செய்து வந்தார் என்றும், அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் திமுகவுக்கு எதிராக வலுவான அரசியல் கட்சியாக மாற  வேண்டும் என்றால் அதற்கு மிக பெரிய சவாலாக இன்று இருப்பது அண்ணாமலை தான் என்கிற தகவலை விஜய்யிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

தற்பொழுது திமுக ஆதரவு வாக்குகளை தான் தமிழக வெற்றி கழகத்தால் பிரிக்க முடியும். மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் காட்சிகளை தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு கொண்டு வருவதின் மூலம், திமுகவுக்கு செல்லும் வாக்குகளை தான் பிரித்து திமுகவை பலவீனப்படுத்த முடியுமே தவிர, திமுக VS பாஜக என்கிற அரசியல் களத்தை திமுக VS தவெக என மாற்ற முடியாது.

அந்த வகையில் 2026 சட்டசபை தேர்தல் திமுக VS பாஜக என்பதை நோக்கி தான் நகர்கிறது. இந்த நிலை திமுகவுக்கு மட்டுமில்லை தமிழக வெற்றி கழகத்திற்கும் மிக பெரிய சவாலாக இருக்கும் அண்ணாமலை MOST DANGEROUS PERSON என விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் வார்னிங் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top