Close
பிப்ரவரி 23, 2025 2:32 காலை

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 11 மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வுக் கூட்டம்..!

மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நெல்பேட்டை தயிர் மார்க்கெட்டில் புதிய கடைகளை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

மதுரை:

மதுரை தமுக்கம் மைதானத்தில் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்துப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , சமூக நலம் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி (தூத்துக்குடி) வெங்கடேசன் (மதுரை) தங்கதமிழ்ச்செல்வன் (தேனி) ராணி ஸ்ரீகுமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மதிப்பிற்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த் ,மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர்
சித்ரா விஜயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் கிரண் குராலா, மற்றும் 11 மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேசியதாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு கடந்த மூன்று ஆண்டு காலங்களில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி உள்ளது. வரி வசூல் தொடர்பான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். எவ்வித பாரபட்சமும் இருத்தல் கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள 134 நகராட்சிகள் மற்றும் 24 மாநகராட்சிகளில் கடந்த நான்கு வருடங்களில் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம், சீர்மிகு நகரத் திட்டம், மூலதன மானிய நிதி, அம்ருட் 2.0, தூய்மை இந்தியா திட்டம் 2.0, நமக்கு நாமே திட்டம் (நகர்ப்புரம்),

நகர்ப்புர சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமும் ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி மற்றும் ஜெர்மானிய வங்கியின் நிதியின் மூலமும் மொத்தம் ரூ.29084 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்கள், சந்தைகள், அறிவுசார் மையங்கள், சாலைகள், பூங்காக்கள், நீர்நிலை மேம்பாடு, குடிநீர்வசதி, பாதாள சாக்கடை வசதி போன்ற பல உட்கட்டமைப்பு பணிகள் அனுமதிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டங்களை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்கு அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் கவனம் எடுத்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ,துணை ஆணையாளர்கள் சிவக்குமார், ஜெய்னு லாப்தீன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், உதவி ஆணையாளர்கள் பிரபாகரன், கோபு, மணியன். செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, செய்தித்துறை இணை இயக்குநர் ம.வெற்றிச்செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்பொறியாளர்கள், உதவிசெயற் பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top