காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சந்நிதி.இங்கு ஆண்டு தோறும் பள்ளி மாணவ,மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனையையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
இதனையடுத்து மூலவருக்கும், உற்சவருக்கும் லட்சார்ச்சனை நடைபெற்றது.மாணவ,மாணவியர்கள் பலரும் தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்து அவர்களது பெயரைச் சொல்லி அர்ச்சனை சீட்டு பெற்று லட்சார்ச்சனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் டி.சி.சௌந்தராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.