காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரம் தென்னேரி அருகே அமைந்துள்ளது பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்ரோஷணத்திற்கான யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுக்கை பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.மறுநாள் 15 ஆம் தேதி கோ.பூஜை மற்றும் ஹோம பூஜைகள் ஆகியன நடைபெற்றது.16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் ஸ்ரீ வத்சன் தலைமையிலான குழுவினர் ராஜகோபுரத்திற்கு புனிதநீர்க் குடங்களை எடுத்துச் சென்று மகா சம்ப்ரோஷணம் செய்தனர்.
இதனையடுத்து ஆலயத்தின் பரிவார தெய்வங்களான ஆஞ்சநேயர்,வரதர் உள்ளிட்ட கோபுரங்களுக்கும் மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.விழாவில் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்,வாலாஜாபாத் ஒன்றிய துணைத் தலைவர் பி.சேகர்,அகரம் ஊராட்சி மன்ற தலைவர் சோபா யோகானந்தம் மற்றும் அகரம் கிராமத்தின் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
ஏற்பாடுளை ஆலய செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறநிலையத்துறை ஆய்வாளர் திலகவதி ஆகியோர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர். இரவு ஸ்ரீநிவாசப் பெருமாள் வீதிஉலாவும் நடைபெற்றது.