Close
பிப்ரவரி 22, 2025 10:30 மணி

காரியாபட்டியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி..!

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு பெண்களுக்கு வழங்கப்பட்டது

காரியாபட்டி :

காரியாபட்டி அருகே நடந்த கருத்தரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ல் தெரிவிக்கப்பட்ட அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் நுகர்வோர் உரிமைகள், கடமைகள் , நேரடி விற்பனை, நியாயமற்ற ஒப்பந்தங்கள். மின்னணு வணிகம், போலி விளம்பரங்கள் மற்றும் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெறுவது, அன்றாட வாழ்வில் நுகர்வோர சந்திக்கும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது, உணவு கலப்படத்தால் ஏற்படும் பாதிப்புகள், கலப்படத்தை கண்டறியும் தேர்வு முறை, பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகங்களை எவ்வாறு நிவர்த்தி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 உள்ளடக்கிய பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top