Close
பிப்ரவரி 22, 2025 11:36 மணி

குடிநீர் திட்ட ஆலோசனைக் கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு..!

குடிநீர்த் திட்ட ஆலோசனைக் கூட்டம்

மதுரை:

மதுரை மாநகராட்சி அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகராட்சி பகுதியில் அனைத்து பொதுமக்களுக்கும் சீரான முறையில் தினசரி குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு அம்ரூத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1653.21 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்

அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், குடிநீர் பிரதானக் குழாய் பதித்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், வீட்டு இணைப்புகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஐந்து சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும். பெரியாறு கூட்டுத் குடிநீர் திட்டத்தின் கீழ் சிப்பம் 1 பணி லோயர்கேம்ப் பகுதியிலிருந்து பண்ணைப்பட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை 93.30 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் 100 சதவீதம் பதிக்கப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தினார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.76 திடீர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக அருகில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றி பயன்படுத்துவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, செயற்பொறியாளர் (குடிநீர்) தபாக்கியலெட்சுமி. மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top