Close
பிப்ரவரி 21, 2025 4:05 காலை

முறையான சம்பளம் வழங்க வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு..!

புகார் மனு அளித்துள்ள தூய்மைப்பணியாளர்கள்

நாமக்கல்:

முறையான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

நாமக்கல் மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில், எங்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.

அவர்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. எனினும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஒப்புதல் அளித்த சம்பளத்தை வழங்குவதில்லை. அதுபோல் சீரான சம்பளமும் வழங்குவதில்லை. பணியாளர்களில் ஒருவருக்கு அதிகமாகவும் மற்றொருவருக்கு குறைத்தும் சம்பளம் வழங்கப்படுகிறது.

மேலும், வருங்கால வைப்பு நிதிக்கு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், எங்களது கணக்கில் வரவு வைப்பதில்லை. இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் முறையான பதிலும் அளிப்பதில்லை. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு முறையான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top