Close
பிப்ரவரி 22, 2025 8:20 காலை

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் :ஆர் பி உதயகுமார் பேச்சு..!

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வாடிப்பட்டி:

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்டக்குளம், செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, பூச்சம்பட்டி, கிளைகளில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் மு. காளிதாஸ் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் எம்.வி. கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர். ராஜேஷ் கண்ணா வரவேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பூத் கமிட்டி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி குழு படம் எடுத்துபேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பூத் கமிட்டி நிர்வாகிகளாகிய நீங்கள் வாக்காளர் ஜாபிதாவில் புதிய வாக்காளர் சேர்த்தல், இறந்தவர்களை நீக்குதல், இடமாற்றம் உள்ளிட்ட அந்த பணிகளில் ஈடுபட வேண்டும் மேலும் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால சாதனைகளை துண்டு பிரசுரமாக வீடுகள் தோறும் கொடுத்தும் இந்த நான்கு ஆண்டுகளிலே தமிழகம் எவ்வாறு பின்னோக்கி சென்றுள்ளது என்பதை பற்றியும், கடன் அளவு எவ்வளவு உயர்ந்திருக்கிறது? பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது பற்றியும், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாய் இருக்கிறது மின்சார கட்டணம் சொத்து வரி உயர்ந்திருக்கிறது என்பது பற்றி எடுத்து கூறவேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் பிரசார பீரங்கியாக உறுதிமொழி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். உண்மையையும் சத்தியத்தையும் எதார்த்தத்தை பகிரங்கமாக சொல்வேன். எதற்கும் அஞ்ச மாட்டேன் எதற்கும் பின்வாங்க மாட்டேன். இரட்டை இலை மலர பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

வரும் தேர்தல் நமக்கான தேர்தல். சுதந்திரம் கிடைக்கக்கூடிய தேர்தல். இதில் பாடுபட்டு அயராது உழைத்து அதிமுகவுக்கு முதல் வெற்றியை சோழவந்தான் தொகுதி பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலயமணி, தெய்வதர்மர், கோட்டைமேடு பாலன் உள்பட பூத்து கமிட்டி உறுப்பினர்கள் மற்றும்கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார் இந்த கூட்டத்தில் ஆர் பி உதயகுமார் அவர்களுக்கு பேரகுழந்தை பிறந்ததற்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top