காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீட்டில் உடைத்து நகைகள் திருடுவது மற்றும் சாலை நிறுத்தி வைக்கப்பட்ட நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை களவாடுவதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட சுமார் 11 புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் எஸ் பி சண்முகம் அறிவுரையின் பேரில் இரண்டு சிறப்பு காவல் தனி படை அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக திருட்டு நடக்கப்பட்ட இடங்களில் கேமராக்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வந்த நிலையில் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த குற்றவாளிகள் என தெரிய வந்தது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சிசிடிவி காட்சிகள் தெளிவாக இருந்த நிலையில் பம்மல் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் எனும் நபரை பிடித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையின் கைது செய்து விசாரணை செய்ததில் அவர் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தை சேர்ந்த ரிபாய்தின் மற்றும் பம்மலை சேர்ந்த சுரேஷ் ஆகியோருடன் இணைந்து இந்த திருட்டுக்களை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அதன் அடிப்படையில் 25 சவரன் தங்க நகைகள் வைர மோதிரம் மற்றும் 340 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் மாருதி எக்கோ மாடல் கொண்ட வாகனங்களை திருடுவதில் சதாம் உசேன் பலே கில்லாடி எனவும் அதன் பேரில் திருடிய 3 கார் 2 ஆட்டோக்கள் யமஹா ஆர்15 மற்றும் லேப்டாப் செல்போன் மற்றும் கேமராக்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூபாய் 24 லட்சமாகும்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி சங்கர்கணேஷ், நான்கு மாவட்டங்களில் சுமார் 11 வழக்குகளின் அடிப்படையில் சிறப்பு தனிப் படைகள் இரண்டு அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை பார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ததாக தெரிவித்தார்.
கார் திருட்டில் பலே கில்லாடி சதாம் உசேன் எனவும், ஓட்டுநர் பகுதி கண்ணாடி உடைத்து கார் ஸ்டியரிங்கை எளிதாக உடைத்து திருடும் திறன் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டி : சங்கர் கணேஷ் – டிஎஸ்பி காஞ்சிபுரம்