காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி சார்பில் அரசு தேர்வு எழுதவுள்ள மாணவ , மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் மன உளவியல் தவிர்த்தல் குறித்த சிறப்பு பயிற்சி பட்டறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் , வெள்ளை கேட் பகுதியில் பல்லவன் கல்வி குழுமத்தின் அங்கமான பல்லவன் பொறியியல் கல்லூரி கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு தேர்வு பயம் மற்றும் பல்வேறு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மன உளவியல் நீக்கும் வகையில் சிறப்பு பயிற்சி பட்டறை நிகழ்ச்சி காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பல்லவன் கல்வி குழுமத்தின் ஜெயபெருமாள் போஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி குத்து விளக்கேற்றி நிகழ்வினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
தனியார் நிறுவன மனித வள மேம்பாட்டு நிபுணர் சபரி, வேலை வாய்ப்புகள் குறித்து கவலை படவேண்டாம் எனவும், சிறந்த கல்வியை தேர்வு செய்வதே உங்கள் வேலை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மைண்ட்பிரஷ் நிறுவன தலைமை செயல்அதிகாரி கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பயிற்சி பட்டறை நிகழ்வினை தொடங்கினார்.
இதில் மாணவ, மாணவியர்களுக்கு தவறான கண்ணோட்டம் , பயம் மற்றும் மன அழுத்தம் , தடைகள், தயக்கம் ஆகியவை நீக்க வேண்டும் எனவும், நல்ல சிந்தனை , மனம் விட்டு பேசுதல், நெகடிவ் சிந்தனைகளை தவிர்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை உயர்த்தும் என தெரிவித்தார்.