Close
பிப்ரவரி 23, 2025 1:09 காலை

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு மாதாந்திர முகாம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ..!

விளையாட்டு மைதானத்தில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கல்லூரி மாணவ மாணவிகள் துய்மை பணியாளர்கள் உடன் இணைந்து சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.

பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மாபெரும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாமை மாதம் தோறும் 4வது சனிக்கிழமைகளில் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்தார்.

பின்னர் மாணவ மாணவிகள் தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி இணைந்து விளையாட்டு மைதானத்திலும்,பொது இடங்களிலும் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள் துணி பைகளை வழங்கி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம், பொது இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை வீச வேண்டாம் என கேட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் சப் கலெக்டர் ஆஷிக் அலி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும்,மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top