Close
பிப்ரவரி 23, 2025 1:42 காலை

அரசு உதவி வக்கீல் பணிக்கான தேர்வு : நாமக்கல்லில் 53 பேர் பங்கேற்பு – 16 பேர் ஆப்செண்ட்

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற, அரசு உதவி வக்கீல் பணிக்கான போட்டித்தேர்வு மையத்தை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற அரசு உதவி வக்கீல் பணிக்கான போட்டித்தேர்வில் 53 பேர் பங்கேற்றனர். 16 தேர்வர்கள் பங்கேற்கவில்லை.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம், அரசு உதவி வக்கீல் (ஏபிபி) பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.

இத்தேர்விற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து 69 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வை, நாமக்கல் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியதா, தேர்வு எண்களை வினாத்தாளில் சரியாக எழுதி உள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

இத்தேர்வில் 76.81 சதவீதம் பேர், அதாவது 53 தேர்வர்கள் மட்டுமே பங்கேற்றனர். 16 பேர் கலந்து கொள்ளவில்லை. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top