Close
ஏப்ரல் 15, 2025 10:42 மணி

நாமக்கல்லில் 17 மையத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு: 4,528 மாணவர்கள் பங்கேற்பு..!

தேசிய திறனறிவுத் தேர்வு -கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில், 17 மையங்களில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் 4,528 மாணவ மணவிகள் கலந்துகொண்டனர். 116 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டு தோறும், தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. 7ம் வகுப்பில், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பதோடு, பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெற்றால், பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ. 12,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

நாமக்கல் மாவட்டத்தில், இத்தேர்விற்காக, 4,644 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். அதற்காக, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், ப.வேலூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட 6 தாலுகாக்களில், 17 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இத்தேர்வில், மாவட்டம் முழுவதும் 4,528 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 116 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. விரைவில் இதன் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை மாதம் ரூ. 1,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு மொத்தம் ரூ. 12 வழங்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top