Close
பிப்ரவரி 23, 2025 6:25 மணி

“அதிமுக தலைமையே ” சசிகலா ஆதரவாளர்களால் மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்..! :

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரோடு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் “அதிமுக தலைமையே ” என்று சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்:

மதுரை:

அதிமுகவின் கட்சி, மற்றும் கொடி உள்பட எதற்கும் உரிமை கோரக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமியால் எச்சரிக்கப்பட்ட
பின்னும் சசிகலா ஆதவாளர்களால் ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்.

மதுரை, உசிலம்பட்டியில்  நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் வி. கே. சசிகலாவை வரவேற்று அதிமுக சசிகலா ஆதரவு தொண்டர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்கள்.

தலைமைக்கு தகுதியே! என்றென்றும் எங்கள் அதிமுகவின் தலைவியே!
திசை தெரியாமல் செல்லும் (அதிமுக) கப்பலை தலைமை ஏற்க வருக!
கழகப் பொதுச் செயலாளர், தியாகத்தலைவி, “தமிழர் குலசாமி ”
என்பது போன்ற வாசகங்களால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

என்பது போன்ற பரபரப்பு வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை மதுரை விமான நிலையம் ,பெருங்குடி, மண்டேலா நகர் ,ரிங் ரோடு ,சிந்தாமணி, விரகனூர் ரிங் ரோடு, தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, சமீப காலமாக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கோகுல இந்திரா போன்றவர்களின் பரபரப்பு சர்ச்சையில் தற்போது வி.கே. சசிகலாவை வரவேற்று ஒட்டிய போஸ்டர்கள் மீண்டும் அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top