நாமக்கல் :
நாமக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்பப் பேரணி நடைபெற்றது.
நாமக்கல் சட்ட உரிமைகள் சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்பப் பேரணி, நாமக்கல் அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கியது. நாமக்கல் டவுன் போலீஸ் எஸ்.ஐ. குணசேகரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
போதைப் பொருள் விழிப்புணர்வு சிலம்ப பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள கலந்துகொண்டு சிலம்பம் சுற்றியவாறு ஊர்வலமாக சென்றனர். போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, மெயின் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு, பார்க் ரோடு வழியாக காந்தி சிலை அருகில் பேரணி நிறைவு பெற்றது. இயக்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சுரேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மெடல்கள் வழங்கினார்.
சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், சிலம்பம் ஆசிரியர் கார்த்திக் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.