Close
பிப்ரவரி 24, 2025 4:06 மணி

வாடிப்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..!

வாடிப்பட்டியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா

வாடிப்பட்டி:

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு, ஒன்றியச் செயலாளர் மு. காளிதாஸ் தலைமை தாங்கி, ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஆலயமணி, மலைச்சாமி, பிச்சை ஜெயக்குமார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.

இதில், கட்சி நிர்வாகிகள் கோட்டைமேடு பாலன், மூர்த்தி, முருகன் சுந்தரராஜன் சரவணன் சசி கார்த்தி பெரியசாமி பாலாஜி பாண்டி அழகர் மாலி சந்திரசேகரன் அழகுமலை கண்ணன் ஆனந்தராஜ், யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொறியாளர் குரு பார்த்திபன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top