Close
பிப்ரவரி 24, 2025 3:33 மணி

உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா..!

ஜெயலலிதா பிறந்தநாளில் இனிப்பு வழங்கிய அதிமுகவினர்

உசிலம்பட்டி:

மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்:

ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி மற்றும் டிடிவி அணியினர் ஜெயலலிதா வின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டினர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 77 வது பிறந்தநாள் விழா ஒபிஎஸ் அணி சார்பில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ.பி.அய்யப்பன் தலைமையில்
ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி
கொண்டாடினர்.

பின்னர், பேசிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ.பி. அய்யப்பன்:

ஓபிஎஸ் தொண்டர் மீட்பு குழு இந்த நல்ல நாளில் நாம் சூளுரைத்து கையாலாகாத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், 520 பொய்யான வாக்குறுதிகளை தமிழக மக்களிடம் கூறிவிட்டு சட்டம் ஒழுங்கு சீர்கேடாக உள்ள திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்,

கல்வித்துறையை பிற்படுத்தும் துறையாக மாற்றி இருக்கும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப பொதுமக்கள், வியாபாரிகள் என, அனைவரும் ஒன்றுபட்டு திமுகவை விரட்ட வேண்டும் விரட்ட வேண்டும் என்றும் இந்த நல்ல நாளில் கூறிக்கொண்டு..இந்த அதிமுக வை களவாடிக் கொண்டிருக்கும் நச்சு பாம்பை புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மாவும், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஆன்மாவும் மன்னிக்காது என்றும் வருகின்ற 2026 இல் ஓபிஎஸ் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி அமைப்போம் என்று சூளுரை ஏற்போம் என பேசினார்.

இதேபோன்று உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக சார்பில் நகர மன்ற தலைவர் பூமா ராஜா தலைமையில் அதிமுக வினர் ஜெயலலிதா வின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

இதேபோன்று, உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு அமமுக சார்பில் நகர செயலாளர் மார்க்கெட் பிச்சை தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா வின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top