Close
பிப்ரவரி 24, 2025 4:50 மணி

முதல்வர் திறந்த மருந்தகங்களை அமைச்சர்கள் குத்துவிளக்கேற்றி விற்பனை தொடக்கம்..!

குத்து விளக்கேற்றிய அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாராஜன்

மதுரை:

தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மதுரை மாநகராட்சி செனாய் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனி வேல் தியாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து  மருந்தகத்தை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் .சங்கீதா,மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ,மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன்,  மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர உடன் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top