Close
பிப்ரவரி 24, 2025 4:25 மணி

அலங்காநல்லூரில் முதல்வர் மருந்தகம் : எம்எல்ஏ வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திறப்பு..!

முதல்வர் மருந்தகத்தை திறந்துவைத்த எம்எல்ஏ வெங்கடேசன்

அலங்காநல்லூர்:

தமிழக முதல்வர் சென்னையில் முதல்வர் மருந்தகத்தை ஆயிரம் இடங்களில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதேபோன்று ,மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில், மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் தனராஜ், திமுக நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன்,அலங்காநல்லூர் கூட்டுறவு சார்பு பதிவாளர் ஜெயலட்சுமி, செயலாளர் சாந்தி, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சாமிநாதன், கவுன்சிலர்கள் சேஷா ஜெயராமன். மஞ்சுளா கணேசன், பாண்டி, கலையரசன், அம்சவல்லி,ரமணி வாசன் மற்றும் இடையபட்டி நடராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top