சோழவந்தான் :
சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்திலிருந்து சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் பொதுமக்கள் முள்ளிப் பள்ளம் நிலையூர் கால்வாயில் இறங்கி ஆபத்தான முறையில் சென்று வந்தனர்.
இதனால் நிலையூர் கால்வாயில் ஆற்று பாலம் கட்டித் தர வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர் இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ ஏற்பாட்டில் 30 லட்சம் மதிப்பில் புதிய ஆற்று பாலத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட வெங்கடேசன் எம் எல் ஏ பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கேபிள் ராஜா வரவேற்றார். இதில் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறியாளர்கள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சி பி ஆர் சரவணன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன்,
பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் விவசாய அணி வக்கீல் முருகன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மேலக்கால் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பழனிவேல், மகளிர் அணி சந்தான லட்சுமி, ஜீவபாரதி, வாடிப்பட்டி நகர் காங்கிரஸ் தலைவர் முருகானந்தம், ஊத்துக்குளி விக்னேஷ், பிரதிநிதி ராமநாதன், ஒப்பந்ததாரர் ஆனந்த் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.