நிலக்கோட்டை :
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், அணைப்பட்டி ஊராட்சி, சிறுநாயக்கன்பட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் , ஜெ. ஜெயலலிதா 77- வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு, கிளைக் கழகத்தின் சார்பாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அதிமுக ஒன்றிய கழக துணைச் செயலாளர் ஏ.சீனிவாசன், அண்ணாதிமுக கிளை கழகச்செயலாளர் ஏ.சுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர் வி.பி.நாகராஜன்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.ஜான்சன் ஆகியோர் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.