Close
பிப்ரவரி 24, 2025 7:08 மணி

திருவள்ளூர் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..!

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பிரியாணி வழங்கப்பட்டது

மறைந்த முன்னாள் தமிழகம் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, ஒன்றிய செயலாளர் மகேந்திரன் 1500 பேருக்கு பிரியாணி வழங்கினார்.

தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக கட்சி சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எம். மகேந்திரன் தலைமையில் பெரியபாளையம் அடுத்த வடமதுரை அரசு தொடக்கப்பள்ளி அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து,மலர் தூவி மரியாதை செய்து பின்னர் ஏழை எளியவர்களுக்கும்,பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து வெங்கல் பகுதியில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பிரியாணி வழங்கினார்.இதில் முன்னாள் வில்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், நிர்வாகிகள் லிங்கன்,ராஜீவ் காந்தி,புஷ்பராஜ். நாகராஜ்,தமிழ் மன்னன், ஜெகதீசன்,விஜி, மணிகண்டன் ஆகிய உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top