Close
பிப்ரவரி 24, 2025 8:03 மணி

வந்தாச்சு முதல்வரின் மலிவு விலை மருந்தகம்..!

குத்து விளக்கு ஏற்றிய அமைச்சர் காந்தி. அருகில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 20 முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.

பாலுசெட்டிசத்திரத்தில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தை அமைச்சர் காந்தி பார்வையிட்டு மருந்துகளை வழங்கினார்…வந்தாச்சு முதல்வரின் மலிவு விலை மருந்தகம்..!

கடந்த சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் முதற்கட்டமாக ஆயிரம் மருந்துகங்கள் மருந்தகம் துவக்கப்படும் என அறிவித்தார்.

மேலும் மருந்தகம் அமைக்க மருத்துவ பார்மஸி படித்த மாணவர்கள் தொழில் முனைவோர்களாக முன்னேற்றும் வகையிலும் அவர்களுக்கு மானியம் உடன் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது முதல் கட்டமாக 16 மருந்தகங்கள் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமும் , நான்கு தனிநபர்களும் இதில் இணைந்து 20 மருந்தகங்களும் இன்று திறக்கப்பட்டது.

இதற்காக ரூபாய் 73 லட்சம் மதிப்பிலான மருந்துகள் வரப்பெற்று, மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து அனைத்து மருந்தகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தில் அமைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தினை தமிழக கைத்தறி அமைச்சர் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் பார்வையிட்டு பொது மக்களுக்கு மருந்துகளை வழங்கினார்.

மேலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இது குறித்த விளம்பரப் பதாகைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கவும் ஆலோசனை வழங்கினார்.

இங்கு சர்க்கரை , ரத்த அழுத்தம், இதய நோய் மருந்துகள் உள்ளிட்டவைகளும், சிலவகை அனைத்து மருந்துகள் அதிகபட்சமாக எழுபது சதவீதம் பணம் சேமிக்கும் வகையில் விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெய்ஸ்ரீ , மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யாசுகுமார், ஒன்றியக் குழு பெருந்தலைவர் மலர்கொடி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top