உத்திரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கிராமத்தில் கட்டி உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க அனுமதிக்க கோரி, கிராம மக்கள், பாதிரியார்கள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு.
200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, கட்டியாம்பந்தல் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறு குடிசையில் செயல்பட்டு வந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு, பட்டா நிலத்தை முறைப்படி கிரையம் பெற்று கிறிஸ்துவ தேவாலயம் கட்டப்பட்டு உள்ளது.
புதியதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை திறப்பதற்கு ஒரு சில தனி நபர்கள் பிரச்சனை செய்து மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்து வருகின்றனர் .
புதிய கிறிஸ்தவ தேவாலயம் திறப்பதற்கு அனுமதிக்க கோரி உத்திரமேரூர் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், ஆகியோரிடம் மனு அளித்தும் இது நாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதிய கிறிஸ்துவ தேவாலயத்தை கட்டி திறக்க முடியாததால், பாதிக்கப்பட்டுள்ள கட்டியாம்பங்கள் கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் பாதிரியார்கள் என 200க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து,மக்கள் குறைக்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், புதிய கிறிஸ்துவ தேவாலயம் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
கிராம மக்கள் மற்றும் பாதிரியார்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்று,அது குறித்து கேட்டறிந்த, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
கிறிஸ்தவ குடும்பத்தினர் பாதிரியார்கள் என ஏராளமானோர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.