சென்னை மதுரவாயில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பசுமை பொருளாதார நிதி துறையின் கட்டமைப்பு மாற்றம் நிலையான நிதி மற்றும் இந்தியாவின் பசுமை வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தல் விக்ஸித் பாரத் @ 2047 – பதாமைநநாக்குப் பார்மவ” என்ற தமைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ICSSR) தெற்கு பிராந்திய மையம் ஹைதராபாத் ஆதரவுடன் பல்கலைக்கழக கலை மற்றும் வணிக துறைகளால் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தேசிய கருத்தரங்கை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ் அருண்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த சிறப்புமிக்க கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருங்கிணைப்பாளர் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய அரசின் துணை இயக்குனர், இந்திய அரசின் துணை இயக்குனர், ஜே விஜயலட்சுமி, ( Deputy Director, Government of India, Ministry of Information & Broadcasting, Press Information Bureau ) மற்றும் டர்பன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (DUT) பொருளாதார பேராசிரியர் டாக்டர் ரவீந்தர்ரேனா, ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த தேசிய கருத்தரங்கில் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி மற்றும் பல்கலைக்கழக பதிவாளர், கூடுதல் பதிவாளர், புலத் தலைவர்கள், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்கள், துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.