தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்பி செல்வம் எம்எல்ஏ ஏழிலரசன் தலைமையில் மலர் மாலை அணிவித்து , தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என உறுதி ஏற்று பல்வேறு மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கி பிறந்தநாள் கொண்டாடினர்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் திமுகவினர் அனைவரும் கோலாகலமாக பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல் நல திட்ட உதவியில் வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி, மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மலர்மாலை அணிவித்து, பொன்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என உறுதிமொழி வாசிக்க நிர்வாகிகள் அனைவரும் அண்ணா சிலை முன்பு உறுதிமொழி ஏற்றனர்.
இதனைத் தொடர்ந்து திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு கலைஞர் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினர் ஷர்மிளா முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மிலிட்டரி சாலையில் மாமன்ற உறுப்பினர் பூங்கொடிதசரதன் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள வள்ளலார் இல்லத்தில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.