நாமக்கல் :
சாலப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில், 750 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். காளைகள் முட்டியதில், 35 பேர் காயம் அடைந்தனர்.
நாமக்கல் அருகே உள்ள சாலப்பாளையத்தில் கட்டப்பா ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்திபன் தலைமை வகித்தார். ப.வேலூர் எம்.எல்.ஏ. சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., போட்டியை துவக்கி வைத்தார்.
, நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 750 ஜல்லிக்கட்டு காளைககள் கொண்டுவரப்பட்டன. போட்டியில் 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். காலை, 8 மணி முதல், மாலை 5 மணி வரை, 750 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளில் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு, பாத்திரங்கள், டேபிள், பட்டுப்புடவை, டிரஸ்சிங் டேபிள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மாடுகள் முட்டியதில், 30 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க., மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் ராஜா செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் மேற்பார்வையில், 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.