Close
மார்ச் 3, 2025 4:09 மணி

மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ..!

மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாடிப்பட்டி:

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுபடி , மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந் தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் வழிகாட்டுதலின்படி , மதுரை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தீண்டல் , பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமண தடைச் சட்டம் பெண்களுக்கு எதிரான குற்றம், சமூக நீதி மற்றும் மனித நல்லிணக்கம் மற்றும் காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வு முகாம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடந்தது.

இந்த முகாமிற்கு, மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ் ணன் தலைமை தாங்கி தொடக்கி வைத்து, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் அமுதா வரவேற்றார்.

இந்த முகாமில்,சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியியல் பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்வபதி, போக்சோ மற்றும் குழந்தை திருமண பற்றி ஷ்யாமலாதேவி, காவலன் செயலி பற்றி ஸ்ரீ விஜய தேவி ஆகியோர் விளக்கிப் பேசினர்.

இதில் ,சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஏட்டு நாகராஜன் உக்கிர பாண்டியர உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உடற்கல்வி ஆசிரியர் பாண்டியம்மாள் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top