மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமட்டு வந்தனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்த போது சுமார் 4 கி.மீ தூரமுள்ள இடத்தில் உயர்நிலைபள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
அந்த இடத்தில் பள்ளி கட்டினால் பெண் குழந்தைகள் போய் வர பாதுகாப்பு இல்லை என்றும், தொலை தூரமாக இருப்பதாலும், இடையில் இடுகாடு மற்றும் சுடுகாட்டை கடந்து செல்ல குழந்தைகள் பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி நிழக்கிழார் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.
அவரும், தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு பள்ளிகட்டிடம் கட்டிதருவதற்கு தனது மனைவி தமிழ்செல்வி பெயரில் உள்ள நஞ்சை நிலம் மேலூர் திருப்பத்தூர் சாலையில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை தானமாக மனமுவந்து பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பத்திர பதிவு செய்து கொடுத்தார்கள். பொதுமக்கள், அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் செல்வி, வழக்கறிஞர் துரைபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் அமுதா, முத்துப்பாண்டி ,சாந்தினி கலைச்செல்வி, பிரியா,அமுத நாயகி,ஜெய ஜீவா,அஜந்தா,சந்திரா, அலியார் பள்ளி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் வேலு, ராஜா கஜேந்திரன்,சதிஷ், பாண்டியகுமார் ராஜேந்திரன், பாபு, ரவி, திருவள்ளுவர், ஆகியோர் உடனிருந்தனர்.