நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் கண் சிகிச்சை முகாம் என மக்கள் நல திட்டங்களை நடத்திய காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்..
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா நேற்று தமிழக முழுவதும் திமுகவினர் மக்கள் நலத்திட்டங்கள் அன்னதானங்கள் என பல நிகழ்வுகளை நடத்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஏற்பாட்டின் பேரில், 720 தூய்மை பணியாளர்களுக்கு பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு பேண்ட், சர்ட் மற்றும் சுடச்சுட மதியம் அசைவ பிரியாணி வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் மற்றும் எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கி அறுசுவை பிரியாணியை பரிமாறினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தையும் வழங்கி அவர்களுக்கு குழந்தை நல பெட்டகங்கள் அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் மடம் தெரு பகுதியில் சென்னையும் பிரபல கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டதில் பார்வை குறைபாடு காணப்பட்ட 21 நபர்களுக்கு கண்ணாடிகளும், 13 நபர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கான பரிந்துரையும் செய்யப்பட்டு, நாளை அவர்களுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி கழக செயலாளர் மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
720 தூய்மை பணியாளர்களுக்கு நபர்களுக்கு புத்தாடை வழங்கி அறுசுவை உணவு அளித்த செயல் அனைவரின் வரவேற்பை பெற்றது.