அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சமலைசாமி திருவிழாவுக்கான பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி கடந்த 20 தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூகூர்த்தகால் ஊன்றும் நிகழச்சி நடைபெற்றது. வலையபட்டி அரசம்பட்டி இலக்கம்பட்டி சல்லிக்கோடங்கிபட்டி,வ.புதூர் உள்பட பல்வேறு கிராமப்பகுதியிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜமீன்தார் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, ஐந்து ஊர் கிராம மக்கள் செய்து இருந்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.