தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களில் துவங்கியது.
6617 மாணவர்களும் 7310 மாணவிகளும் என மொத்தம் 13927 தேர்வு எழுதுகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை கடன் பேசலாம் மாதங்களுக்கு முன்பே அறிவித்து அதற்கான பணிகளை துவக்கியது.
அவ்வகையில் இன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு பிளஸ் டூ இன்று காலை துவங்கி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வுகள் 17 பள்ளிகளை சேர்ந்த 6,617 மாணவர்கள் மற்றும் 7310 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 927 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
மாணவர்கள் தேர்வு எழுதற்காக 56 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மூன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுகளை முறையாக நடத்திடவும் மாணவர்களின் தவறுகளை தடுத்திடும் வகையில் என்பது மேற்கொண்ட பறக்கும்படை குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவறை மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்டவைகளில் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.