இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க தேர்வு செய்தது தமிழக அரசு என மத்திய அமைச்சர் கூறிய நிலையில் , தமிழக முதல்வரை சந்தித்து நேரில் இது குறித்த விளக்கம் அளிக்க வாய்ப்பு தருமாறு போராட்ட குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழு மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாய நல கூட்டமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி குறிப்பில்,
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிடக்கோரி தொடர்ந்து பல்வேறு வடிவிலான போராட்டங்களை பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு போராடத்திற்கு ஆதரவு தருகின்ற பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் அவர்களின் ஆதரவுடன் நடத்தி வருவதாகவும் ,
மாலை நேர போராட்ட வடிவில் கோரிக்கை முழக்க போராட்டமாக இன்றுடன் 952வது நாளை எட்டியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான இடத்தேர்வானது முழுமையாக மாநில அரசின் விருப்பத்தின்படியே நடைபெற்றது எனவும் , இந்த திட்டத்தின் இடத் தேர்விற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மாநில அரசு நினைத்தால் இடத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் செய்தியாளரிடத்தில் தகவலை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தினை கவனத்தில் கொண்டு மரியாதைக்குரிய தமிழகத்தின் முதல்வர் அவர்கள் பரந்தூர் வட்டார விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் எஞ்சியுள்ள நீர் நிலையுடன் கூடிய நிறைந்த மருதம் நில பூமியை அழிவியிலிருந்து காப்பாற்றும் வகையிலும் , பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும்,
இது சம்மந்தமாக முதல்வரைச் சந்தித்து நேரில் விளக்கம் அளிக்க வாய்ப்புத் தருமாறும் தமிழக முதல்வரை பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு கேட்டுக்கொள்கிறது.