மதுரை:
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை உயர்நீதி மன்ற கிளை அருகே அப்துல் கலாம் தெரு, மீனாட்சி நகர் பகுதியில், சுமார் 12 ஆண்டுகளாக பொது மக்கள் குடியிருந்து வருகின்றனர். கால்வாயில் சீரமைக்காமல், கொசுத் தொல்லை பெருகி வருகிறது.
இதை, மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைக்க கோரி, தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி கல்லாணை தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவிடம் மனுக்கள் அளித்தனர்.