Close
மார்ச் 3, 2025 10:56 மணி

சோழவந்தானில் அ.ம மு க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்..!

அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

சோழவந்தான் :

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சோழவந்தான் சத்திரம் முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்எல்ஏ கதிர்காமு, கழக அமைப்பு செயலாளர் மேலூர் சரவணன், ஒன்றிய செயலாளர் ராஜன், பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூர் செயலாளர் திரவியம் வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் கோடீஸ்வரன் ரகு,ஜெயபாண்டி வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன் நிர்வாகிகள் இளைஞரணி மாவட்ட செயலாளர் வீரமாரி பாண்டியன் ஒன்றிய இணைச் செயலாளர் சின்ன மருது, ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் முனைவர் பாலு ரஜினி பிரபு ,ரபிக் முகமது, எலெக்ட்ரிசியன் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top