காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏற்படுவதாக தொடர்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் ,
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் எஸ் பி சண்முகம் ஆலோசனையின் பேரில் அங்கு செயல்பட்டு வந்த அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய முடியும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மதுபான கடை மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் இன்று முதல் இக்கடை செயல்படாது என அறிவிக்கப்பட்டது.
ஆட்சியர் கடையை மூட அறிவித்ததால் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.