போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 2,000 அபராதமும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 5,00,000/- வழங்கிட இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி என்பவரின் 9 வயது மகள் கடந்த 10.07.2019 அன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது வல்லக்கோட்டை முருகன் கோயில் அருகில் தேங்காய். பூ வியாபாரம் செய்து வரும் எதிரி அருணாச்சலம்(65) என்பவர் மேற்படி சிறுமியை கோயில் பின்புறம் உள்ள பாத்ரூம் அருகில் அழைத்துச்சென்று பாலியல் வண்புணர்ச்சி செய்தது சம்மந்தமாக சிறுமியின் தாயார் ஒரகடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் .
அதன் அடிப்படையில் அப்போதைய ஒரகடம் காவல் ஆய்வாளர் நடராஜன் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேற்படி வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் சண்முகம், அவர்களின் உத்தரவின்பேரில் தற்போதைய ஓரகடம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன். நீதிமன்ற காவலர் பச்சையம்மாள். மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் லட்சுமி. ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் மேற்படி வழக்கின் எதிரி அருணாச்சலத்திற்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.நசிமா பானு அவர்கள் எதிரி அருணாச்சலம் குற்றவாளி என உறுதிசெய்து ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2,000 அபராதமும், கட்ட தவறினால் ஓராண்டு சிறைக்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகை ரூபாய் 5,00,000/- வழங்கிட தீர்ப்பு வழங்கினார்.