தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியை சேர்ந்தவர் பீர்இஸ்மாயில் – பாத்திமா பீவி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அதில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அவரது சொத்தை சரி பாதியாக அந்த தம்பதியினர் பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவரது மூத்த மகளான ஹபீபு நிஷா என்பவர் அவர்களது சொத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு கூட வழங்காமல், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் தன்னை அவதூறாக பேசி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடியிருக்க வீடு இல்லாமல் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமலும் சுற்றி திரியும் அந்த தம்பதியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தங்களது மூத்த மகளால் தாங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும், தங்களிடம் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தங்களை தனது மூத்த மகன் ஷபிப் நிஷா ஏமாற்றிவிட்டதாகவும்,
அவர் திமுகவில் சமூக வலைதள பொறுப்பாளர் பொறுப்பில் இருக்கும் நிலையில் அவரை எந்த அதிகாரிகளும் தட்டி கேட்பதில்லை எனவும், பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தான் ஆளுங்கட்சியில் இருப்பதாக கூறி தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறி வருகிறார் ஆகவே தங்களது வாழ்வாதாரம் கருதி தங்களது சொத்துக்களை மீட்டு தரும்படி அந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்த நிலையில், தனது மூத்த மகளால் தாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக அவரது தந்தை பீர் முகமது வெளியிட்டுள்ள வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.