Close
மார்ச் 4, 2025 6:39 மணி

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளத்தில் சிறு விளையாட்டு மைதானம் திறப்பு விழா..!

விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்ட அமைச்சர் மூர்த்தி. அருகில் கலெக்டர் சங்கீதா

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு விழா தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த விழாவில், அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா.சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வெங்கடேசன் எம் .எல்.ஏ. மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு பாலசுப்ரமணியம்,

ஒன்றியச்செயலாளர்கள் தனராஜ் ,பரந்தாமன், நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகர வேல் பாண்டியன்,பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன்,முன்னாள் இளைஞர் அணி சந்தன கருப்பு, தண்டலை சதீஷ், முடுவார் பட்டி முரளி, முன்னாள் சேர்மன் பஞ்சு அழகு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதா. மகேந்திரன், அய்யங்கோட்டை மருது உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கு ஏற்றி விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top