Close
மார்ச் 19, 2025 10:00 மணி

காஞ்சிபுரத்தில் மினி பேருந்து இயக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஆணை வழங்கல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 மினி பேருந்து வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன் பேரில் மொத்தம் 45 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலினையில் நான்கு விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி முன்னிலையில், குலுக்கல் முறையில் பேருந்துகளை இயக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் காஞ்சிபுரம் – பாலுசெட்டிசத்திரம் , களியனூர் முதல் பண்ருட்டி சிப்காட் , காஞ்சிபுரம் – பனப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் முதல் தண்டலம் ராஜலட்சுமி கல்லூரி பின்புறம் வரை , கோவூர் முதல் போரூர் , குன்றத்தூர் பேருந்து நிலையம் முதல் முகலிவாக்கம் வரை என முக்கிய வழித்தடங்கள் உள்ளது.

இந்த மினி பேருந்துகள் அதிகபட்சம் 25 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், குன்றத்தூர் போக்குவரத்து வட்டார அலுவலர் வெங்கடேசன், பேருந்து விண்ணப்பதாரர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top