காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 மற்றும் 50 வது வார்டு வட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மிலிட்டரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கழக கொள்கை பரப்பு செயலாளர் இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் கலந்து கொண்டு வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவது குறித்து பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் கூட்டத்தில் உரையாற்றுகையில் அதிமுக என்ற ரயில் வண்டி சென்று கொண்டே இருக்கும் விருப்பமுள்ளவர்கள் ஏறி கொள்ளலாம் விருப்பமில்லாதவர்கள் இறங்கிக் கொள்ளலாம் எனவும், அதிமுக இயக்கத்தில் உழைப்பவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்பதற்கு பல சாட்சியாக உள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் கோல்ட் மோகன், மாமன்ற உறுப்பினர் பிரேம், வட்ட கழக செயலாளர் பிரவீன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.