Close
மார்ச் 21, 2025 1:04 மணி

கும்பகோணம் மாநாட்டுக்கு அழைப்பு : இந்து மக்கள் கட்சி நிறுவனர் காஞ்சிபுரம் வருகை..!

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்து, மணிவிழா அழைப்பிதழ் அளித்தார்.

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அவர்களின் 60-வது மணி விழா மற்றும் கும்பகோணம் நகரில் நடைபெறும் மாநாட்டுக்கு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு என பல்வேறு நிகழ்வுகளுக்காக காஞ்சிபுரம் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் வருகை புரிந்தார்.

முன்னதாக அவர் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்து, மணிவிழா அழைப்பிதழ் அளித்தும், அதற்கான லோகோ வெளியிட்ட பின் அவரிடம் அர்ஜின்சம்பத் வாழ்த்துக்களை பெற்றார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது மேற்கொண்ட பணிகள் கூட தற்போது இல்லை என்பதும், வாழத் தகுதியற்ற நகரமாக காஞ்சிபுரம் மாறி வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் பல்வேறு புகழ்பெற்ற திருக்கோயில்களில் தரிசனம் மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரியும் நிலையில் நெறி செல்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க உரிய அடிப்படை வசதிகள் மற்றும் நீர் சத்து மிக்க பானங்களை இலவசமாக திருப்பதியைப் போல அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது தேர்தல் ஆணையம் நேர்மையாக முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனில் அதற்கு முன்பாக திமுக ஆட்சியை டிஸ்மிஸ்ஸை விட்டு தேர்தலை நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்கள் முறை கேடுகளில் ஈடுபட்டு தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாநில அமைப்பு செயலாளர் முத்து, மகளிர் அணி தலைவி ஷீலா, மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வரும் 2026 தேர்தலின் போது திமுக ஆட்சியில் இருந்தால் துஷ்பிரயோகம் செய்யும் எனவே அவர்களை பதவி நீக்கம் செய்து தேர்தலை ஆணையம் நடத்த வேண்டும்..

திருக்கோவிலுக்கு தரிசனம் வரும் பக்தர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு நீர் சத்துள்ள பானங்களை தந்து உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top