Close
மார்ச் 26, 2025 6:17 மணி

சாலையை ஆக்கிரமித்து மணல், செங்கல் வியாபாரம் : அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை..!

சாலையை மறித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மணல், செங்கல் ஆகியவையே போக்குவரத்து போலீசார் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்

மதுரை:

மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில், பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சாலையில் வைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். நாளுக்கு நாள் இது தெரு முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

இது குறித்து, தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் அதிரடியாக களமிறங்கிய எஸ். எஸ். காலனி காவல் ஆய்வாளர் காசி மற்றும் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட காவலர்கள் சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கட்டுமான பொருட்களை ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றினர்.

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த ஆக்கிரமிளார்களை அதிரடியாக அகற்றிய காவல் துறைக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர். பொதுமக்கள் கூறுகையில்,

சாலையில் செல்லும் பொழுதும் காற்று அடிக்கும் போதும் மணல் கண்களில் விழுவதால் வாகனம் ஓட்டும் போது கீழே விழுவதாகவும், மேலும் சாலையில் செல்லும் வழியில் ஒரு பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி மாணவ,மாணவிகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு மிகுந்த இடையூறாக இருந்ததாகவும் அதிரடியாக அகற்றிய காவல் துறைக்கு எங்களது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top