Close
மார்ச் 22, 2025 6:37 மணி

வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..!

கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி

சோழவந்தான்:

மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக வாடிப்பட்டியில் இந்தி எதிர்ப்பு
நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். வாடிப்பட்டி பேரூராட்சி சேர்மன் பால்பாண்டியன் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ, தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், இளம் பேச்சாளர் செசலின் சந்தியா தீப்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா ஆகியோர் மத்திய அரசை கண்டித்து சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதர், சேகர்,முத்தையன், நேரு ,பாண்டியன், சோமசுந்தர பாண்டியன், செந்தில்குமார், தன செல்வம், தன்ராஜ், பரந்தாமன் , தனசேகர், சத்திய பிரகாஷ், ரகுபதி மனோகர வேல் பாண்டியன், கிருஷ்ணவேணி பால்பாண்டியன்,இளைஞரணி வினோத் தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்த் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி பேரூர் முன்னாள் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top