மதுரை:
மதுரை தெற்கு வட்டம், காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி கடந்த 14.10.2024 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அன்னாரது குடும்பத்தாருக்கு நிவாரண நிதியாக ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
உடன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் , வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா உட்பட பலர் உடன் இருந்தனர்.