மதுரை:
சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் 2025-ன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி பிரார்த்தனைக் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரியில் இறுதி ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சி இரவு வணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கியது. முன்னாள் மாணவர் சங்கத்தின் பொருளாளர் முனைவர் பொன் பட்டினத்தார் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் மற்றும் மேனாள் துணை முதல்வர் முனைவர் இளங்கோ வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் செயலர் முனைவர் தீனதயாளன் தலைமையுரை ஆற்றினார். தேனி மண்டல பெருந்திரள் கூடலின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டுதல் செய்விக்கப்பட்டது. சங்கத்தின் இணை செயலர் முனைவர் கோபி பொன்னாடைகளை, வழங்கினார்.
கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் ஒவ்வொரு துறைகளும் முதல் ஐந்து மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவர் முனைவர் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு எழுதிய புத்தகம் “போட்டித் தேர்வு பதினைந்தும் புதிது” பரிசாக வழங்கப்பட்டது.
இந்த புத்தக பரிசுகளை முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் சுரேஷ் கண்ணன் ஸ்பான்சராக வழங்கினார். தேனி மண்டல பெருந்திரள் கூடலின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. மகேந்திரன் மற்றும் வாலகுருநாதன் ஏற்புரை வழங்கினர். சங்கத்தின் ஆலோசகர் முரளி, சங்கத்தின் இணைச்செயலாளர் முனைவர் கோபி, மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் வேலன், முனைவர் அருள்மாறன், முனைவர் வடிவேல் ராஜா, அண்ணலங்கோ, ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் மதிய உணவு ஸ்பான்சராக சங்கத்தின் செயலர் முனைவர் தீனதயாளன் வழங்கினார். சங்கத்தின் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேல் ராஜா நன்றி உரை ஆற்றினார்.