Close
ஏப்ரல் 1, 2025 3:37 காலை

காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா..!

பள்ளி ஆண்டுவிழா

காரியாபட்டி:

காரியாபட்டி மீனாட்சி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடை பெற்றது. முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். தேனி மாவட்ட துணை ஆட்சியர் தினு ஆனந்த் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி கார்த்திக் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் பாரதமணி வரவேற்றார் .

பள்ளி மாணவர்களின் கன் கவர் கலை நிகழ்ச்சிகள் நாடகம் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. விழாவில், சிறந்த மாணவர்கள் மற்றும் போட்டி களில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் மேலாளர் ராஜாராம், பேராசிரியர் மருதுபாண்டியர் எஸ்.பி. எம். நிறுவனத் தலைவர் அழகர்சாமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை சுபன்ஹா பேகம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top