காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரிசூலகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கடந்த 22 ஆண்டுகளாக, இப்பகுதியை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை மாணவர்களின் ஆங்கில கல்வி அறிவினை திறன் பட நகரப் பள்ளிகளுக்கு ஈடாக கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியின் 22 ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் பள்ளி நிறுவனர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகை நளினி, சின்னத்திரை நடிகை அர்ச்சனா மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட நடிகை நளினி, தற்போது செல்போன் பயன்பாட்டை அதிகமாக மாணவர்கள் பயன்படுத்துவதாக குற்றம் சொல்லுகிறார்கள். அதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது .
பள்ளி சென்று திரும்பும் பிள்ளைகளிடம் மனம் விட்டு அன்றைய நிகழ்வுகளை கேட்க தொடங்கினாலே அனைத்தும் மகிழ்ச்சியாக செல்லும். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவ , மாணவிகள் உலக நாடுகள், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் பெயர் கூற , மற்றொரு மாணவர் அதற்கு பதில் கூற என சிறார் வயதில் அசத்தினர்.
தொடர்ந்து பரத நாட்டியம், தலைவர்கள் கருத்துக்கள் என பலவகைகளில் அசத்தி பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்களை மகிழ்வித்தனர்.