Close
மார்ச் 25, 2025 1:17 காலை

விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் : இருமடங்கு நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை..!

விவசாயிகளிடம் நேரடியாக பேசிய அதிகாரிகள்.

சோழவந்தான்:

வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நெல் நனைவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் எதிரொலியாக இரு மடங்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை ஊராட்சியில் ஒருபோக பாசன விவசாய மூலம் வடுகபட்டி தனிச்சியம் அய்யங்கோட்டை கல்லுப்பட்டி நகரி உள்ளிட்ட இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது ‌.

அய்யங்கோட்டை பகுதியில்கடந்த 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது குறைவான கொள்முதல் அளவு இருப்பதால் நிறைய விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்தநெல்லை போட முடியாமல் தவித்தனர்.

முறைகேடு நடக்காமலும், கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் அதனைத் தொடர்ந்து கொள்முதல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கொள்முதல் அளவை இரு மடங்காக அதிகரித்து உடனடியாக விவசாயிகளுக்கு பண பட்டுவாடா செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றனர்.

இது குறித்து இந்த பகுதி விவசாயிகள் கூறுகையில் ஒரு சில விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தவறான புகார் அளித்ததன் அடிப்படையில் அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதாகவும் விசாரணைக்கு பின்பு இரண்டு மடங்கு நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்து சென்றுள்ளதாகவும் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top