உசிலம்பட்டி:
மதுரை, உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மதுரை மாவட்ட பகுதியில் அடிக்கடி ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், குற்ற செயல்களை குறைக்க காவல்துறையுடன் இணைந்து செயல்படுவது குறித்து சட்ட ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி டி.எஸ்.பி.சந்திரசேகரன், தமிழ்நாடு ஆடுகள் வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆடுகள் தங்க வைக்கப்படும் இடத்தில் முறையான கண்காணிப்பு கேமரா அமைப்பது மற்றும் ஆடு வளர்ப்போரின் குழந்தைகளை அரசு பணிகளுக்கு ஊக்குவிக்கும் வண்ணம் கல்வியில் முன்னேற்ற வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை உசிலம்பட்டி டி.எஸ்.பி.சந்திரசேகரன் வழங்கினார்.
மேலும் இக் கூட்டத்தில் ,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம், போதை பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறையுடன் இணைந்து போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க உதவிடும் வகையில் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.